டெல்லியில் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

" alt="" aria-hidden="true" />


டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்


சிஏஏ, என்ஆர்சி,என்ஆர்பிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாயின்பாக் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தை அமைதியான முறையில் கடந்த 4 மாதங்களாக நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஜாஃபராபாத் சந்த்பாக் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 “இங்கு போராடுபவர்களை கலைக்க டெல்லி காவல்துறைக்கு மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் காவல்துறை சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்பிச்செல்லும் வரைதான் அமைதி காப்போம்ää" என பா.ஜ.க. தலைவர் கபில் மிஸ்ரா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். “ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார்.
டுவிட்டரில் இந்தப் பதிவுவெளியான அடுத்த நாளே (திங்கள் கிழமை) வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்தது. ஜாஃபராபாத் சந்த்பாக் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடிய இடங்களுக்கு அருகிலேயே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு போராட்டங்களைத் நடத்தி அடுத்த சில மணி நேரங்களில் வன்முறை வெடித்தது. இருதரப்பும் மோதல் ஏற்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கற்களை வீசப்பட்டதுடன் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டன. இவற்றைப் பதிவு செய்ய முயன்ற பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் வழிப்பாட்டு தலமான மசூதிகள் தர்காக்கள் இடிக்கப்பட்டுää அங்கு காவி கொடிகளையும் ஏற்றி அத்துமீறல் மதவாத சக்திகள் செய்துள்ளன.
பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தும் கலவரத்தில் மதவாத சக்திகள் ஈடுபட்டுள்ளன. மேலும் கலவரம் தொடர்பாக வெளிவரும் வீடியோவில் மதவாத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதும் அதற்கு காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது காணும் போது அச்சம் ஏற்படுகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே வன்முறை தலைவிரித்தாடியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு டெல்லியில் உள்ள மக்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


Popular posts
கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்கவில்லை; ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்
Image
20 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை
Image
கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை 1,000 மற்றும் பொருட்களை வழங்கி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார்
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image