கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை 1,000 மற்றும் பொருட்களை வழங்கி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் துவக்கி வைத்தார்
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கொரோனா வைரஸ் நிவாரண சிறப்பு உதவி தொகை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கும் நிகழ்ச்சியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலை கடையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் டேங்க் சண்முகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நகர செயலாளர் சுந்தர், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, தில்லை செல்வம், ஆவின் தலைவர் பன்னீர்செல்வம், மார்கெட் நாகராஜ், கருப்பு ராஜா, மாணவரணி சங்கர், நிர்வாகிகள் மருதவாணன், கார்த்திகேயன், சரவணன், பாலமுருகன்,கதிர், மார்கெட் ராஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.