20 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் தேனி மாவட்டம் போடி உள்பட 5 நகரங்கள் வெளிநபர்கள் நுழைய தடை:
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் போடி, பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து இந்த ஐந்து நகர்ப் பகுதிக்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதி கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள மக்கள் பொருட்கள் வாங்கவும் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதற்காக 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் நியமித்து மக்களுக்கு காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இந்தப் பணிக்காக வருவாய் துறை, சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
தினமும் காலை 8 மணி முதல் 2 மணிவரை வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.
நோய் அறிகுறி உள்ள வீடுகளில் அமைந்துள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது .
அவர்கள் வீடுகள் அமைந்து உள்ள தெருக்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.